தொழிலாளியை தாக்கிய துரை: மக்கள் போராட்டம்!

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டெஸ்போட் – மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை தோட்டதுரை கடுமையாக தாக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இன்று (15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்களாவில் காவலாளியாக வேலைசெய்த ஒருவரே துரையால் தொழில் ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் கேள்வி எழுப்ப முற்பட்ட வேளையிலேயே அவரை அடித்து விரட்டியுள்ளார் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் பிரதிநிதியாக நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் சம்பவ இடத்துக்கு இன்று சென்றார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நீதியையும், தொழில் ரீதியான நிவாரணத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here