வாழைச்சேனையில் இருந்து தென்பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற 2 கனரக வாகனங்கள் சிக்கின!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து தென்பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற 2 கனரக வாகனங்களை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாகனங்களின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பாரிய கொள்கலன் மற்றும் வண்டியிலும் மணல் ஏற்றிச் செல்லும்போது விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அதிரடிப்படையினர் புனானை பிரதேசத்தில் வைத்து சோதனையிட்டபோது இவ் சட்ட விரோத நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில் 3 கியூப் மணலை மாத்திரமே ஏற்றுவதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும் 6 கியூப் மணல் ஏற்றிச் செல்லப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை வெள்ளிக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here