முரளிதரனாக நடிக்காமலிருக்கலாமா என பாருங்கள்: பாரதிராஜா!

முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா என பாருங்கள் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா எழுதி உள்ள கடிதத்தில்,

முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும். முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா என பாருங்கள். விஜய் சேதுபதியை நினைத்து கோபப்படுவதா? அறியாமையை நினைத்து சிரிப்பதா?

நம் ஈழத்தமிழ்பிள்ளைகள் இந்த முத்தையா. எங்களை பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கை துரோகி தான். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here