தமிழ் அரசியல்கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

தமது வழக்குகளை அரசாங்கம் வேண்டுமென்றே இழுத்தடிப்பதால் விரக்தியடைந்த நிலையில், வேறு வழியில்லாமல் மீண்டும் ஒரு முறை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளதாக அரசியல் கைதிகள் நேற்றிரவு தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும் தமது வழக்கு விசாரணைகளில் அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்னிலையாகாமல், வேண்டுமென்றே வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் பலமுறை குற்றம்சாட்டி வந்தனர். இது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கும் பலமுறை முறையிட்டிருந்தனர். எனினும் யாரும் தமது கோரிக்கையை கணக்கெடுக்கவில்லையென குறிப்பிட்டுள்ள அரசியல் கைதிகள் வேறு வழியின்றி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் குறித்துள்ளனர்.

அனுராதபுரம் விமானநிலையம் மீது நடத்தப்பட்ட கரும்புலி தாக்குதல், விமானப்படை விமானம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் போராளிகளே அங்கு அரசியல்கைதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here