பொலிஸ் பொறுப்பதிகாரியும், மேலுமிருவரும் விபத்தில் காயம்!

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் பயணிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு கெனமுல்ல பகுதியில் நடந்த விபத்தில் இவர்கள் காயமடைந்தனர்.

வேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொறுப்பதிகாரி பயணித்த உத்தியோகபூர்வ பொலிஸ் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளான மூவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here