இன்று முதல் கட்டுநாயக்கவில் ஊரடங்கு: விமான நிலையம் செல்பவர்களிற்கான அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் இன்று (15) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுலாகியுள்ளது.

தற்போது 19 பொலிஸ் பகுதிகளுக்குள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கும்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள்ல் இதுவரை 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.

அங்குள்ள தொழிற்சாலைகளின் பணியாளர்கள் தங்கள் சேவை அடையாள அட்டைகளை ஊரடங்கு அடையாள அட்டையாக பயன்படுத்துதி பணிக்கு செல்லலாம்.

பயணிகள் அல்லது பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து நபர்களும் தங்கள் விமான டிக்கெட்டை அல்லது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றுபவர்களிற்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை. பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பொது அல்லது தனியார் வாகனங்களில் பிரயாணிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here