மத சடங்கில் கலந்து கொண்ட 12 பேருக்கு கொரோனா!

இரத்தொளுகம பகுதியில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பன்னிரண்டு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார விதிமுறைகளை மீறி ஒன்றுகூடியவர்களிடம் கடந்த  திங்கள்கிழமை (12) பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் சுனேத் ரணவீர தெரிவித்தார்.

மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 12 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

தொற்றாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த சில நாட்களில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அடையாளம் காணப்பட்டவர்களில் நான்கு கொரோனா வைரஸ் நோயாளிகள் இரத்தொளுகம வீட்டுத்திட்டத்தில் வசிப்பவர்கள். மீதமுள்ளவர்கள் கல்லாவத்தை மற்றும் முத்துவாடி வீதி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here