அதிவேக நெடுஞ்சாலை சேவையிலீடுபடும் பேருந்து உரிமையாளர், சாரதி, நடத்துனருக்கு கொரோனா!

மத்துகம பகுதியில் கொரோனா தொற்றுடன் மூவர் கண்டறியப்பட்டுள்ளனர்.

மத்துகம- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இயக்கப்படும் சொகுசு பேருந்தின் உரிமையாளர், சாரதி, நடத்துனர் ஆகியோரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மத்துகமவிலுள்ள ஓவிடிகல பகுதியை சேர்ந்த பேருந்த உரிமையாளர், நவுல்துவா பகுதியை சேர்ந்த பேருந்தின் சாரதி மற்றும் பதுகம பகுதிகளில் வசிக்கும் நடத்துனர் ஆகியோரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த மூன்று நபர்களும் நேற்று (12) களுத்துறை நாகொட மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் நோயாளிகளாக கண்டறியப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here