6 புதிய அரசியல் கட்சிகளிற்கு அங்கீகாரம்: வடக்கிலும் 2 கட்சிகள்!

ஆறு புதிய அரசியல் கட்சிகளை தேசிய தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் தற்போது, 70 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன.

அருணலு ஜனதா பெரமுனா, ஜனதா சேவக கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிசக் கட்சி, பிவித்தூரு ஹெல உருமய, சமத்துவ கட்சி மற்றும் சிங்கள ரவயா ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், சிங்கள ராவயவின் பிரதிநிதிகள் பெயரை அபே ஜனதா ராவய என மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய கட்சிகளை பதிவு செய்ய விரும்புபவர்களிடமிருந்து ஜனவரி மாதத்திலிருந்து தேர்தல் ஆணைக்குழு விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரை 154 விண்ணப்பங்கள் பல்வேறு பிரிவுகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழு நேர்காணல்களில் இருந்து 121 கட்சிகளை அழைத்தது.

பின்னர், தேர்தல் ஆணைக்குழு ஆறு புதிய தரப்புக்களை நாட்டில் புதிய அரசியல் கட்சிகளாக அங்கீகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here