எண்ணெய் கப்பல் கப்டனிற்கு 12 மில்லியன் ரூபா அபராதம்!

இலங்கை கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான எம்ரி நியூ டயமண்ட் கப்பலின் கப்டன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு 12 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி தம்மிக கணேபொல இன்று அபராதம் விதித்தார்.

இந்த வழக்கில் சட்டமா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், கப்பல் நிறுவன உரிமையாளரிடமிருந்து மேலும் ரூ .200 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றத்தில் உத்தரவைக் கோரினார்.

இருப்பினும், நீதிபதி கிரேக்க நாட்டை சேர்ந்த கப்பல் கப்டன் மீது 12 மில்லியன் ரூபா அபராதம் விதித்தார்.

எரிபொருள் கப்பலின் கப்டன் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைய சட்டத்தின் கீழ் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here