கொரோனா அறிக்கை தவறு: CEAT நிறுவனம் மீள திறக்கும்!

சியாட் கெலனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அறிக்கை தவறானது என தெரிய வந்ததையடுத்து, நிறுவனம் மீள திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொரோனா தொற்றையடுத்து, நிறுவனத்தின் ஊழியர்களை பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்த நியமிக்கப்பட்ட முன்னணி வைத்தியசாலையின் அறிக்கையில் ஏற்பட்ட தவறினால், 2 பேர் கொரோனா தொற்றுடன் இருப்பதாக தகவல் பரவியதாகவும், அந்த அறிக்கை தவறானது என தெரிய வந்துள்ளதாகவும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியாட் கெலனி ஹோல்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையில், அதன் அனைத்து நிர்வாக அலுவலகங்களும் நாளை (15) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கூறியது.

சோதனை முடிவுகள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுத்திகரிப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று சியாட் கெலனி ஹோல்டிங்ஸ் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here