பாடசாலையொன்றின் 8 மாணவர்களிற்கு கொரோனா!

திவுலப்பிட்டிய ஞானோதய மத்திய கல்லூரியில் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எழுதும் மாணவர் உள்ளிட்ட எட்டு மாணவர்களுக்கு நேற்று (13) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

க.பொ.த உயரதரம், தரம் 3,4,7,8 இல் கல்வி பயிலும் மாணவர்களே கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவரை இரணவில வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்தபடி அவர் உயர்தர பரீட்சையில் தோற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

அதேவேளை, கொழும்பு கோதமி பாலிக, கம்பஹா ரத்னவலி பாலிக ஆகிய பாடசாலை மாணவர்களும் முன்னர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here