5ஜி உலகில் நுழையும் அப்பிள் நிறுவனம்: நான்கு புதிய மொடல்கள் அறிமுகம்

5ஜி அம்சம் இருக்கும் நான்கு புதிய ஐஃபோன் 12 வரிசை ஸ்மார்ட்ஃபோன்களை அப்பிள் நிறுவனம் நேற்று (13) அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஹோம், விளையாட்டு என மற்ற சந்தைப் பொருட்களையும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது.

இணையம் மூலமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 5.4 இன்ச் அகல ஐஃபோன் 12 மினி, 6.1 இன்ச் அகல ஐஃபோன் 12 மற்றும் ஐஃபோன் 12 ப்ரோ, 6.7 இன்ச் அகல ஐஃபோன் 12 ப்ரோ மக்ஸ் ஆகிய மொடல்கள் அறிமுகமாகின.

ஐபோன் 12 ஒரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ஐபோன் 11 ஐ விட இரண்டு மடங்கு பிக்சலை கொண்டுள்ளது. அத்துடன், எந்த ஸ்மார்ட்போன் கண்ணாடியை விடவும் கடுமையானது என கூறப்படுகிறது. கார்னிங்குடன் செராமிக் ஷீல்ட் என்ற புதிய பொருளை கலந்து கண்ணாடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 12 மாக்ஸேஃப் உடன் புதிய சார்ஜிங் அனுபவத்தைக் கொண்டுவரும். அப்பிள் வாட்சுக்கு உள்ளதை போல காந்த சார்ஜிங் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அப்பிள் தொலைபேசி, வாட்சை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய புதிய சார்ஜரையும் ஆப்பிள் வெளியிடுகிறது.

கடந்த மாதம் அப்பிள் நிறுவனம் ஐபாட் ஏர், அப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மற்றும் மலிவு விலை வாட்ச் எஸ்ஈ ஆகிய பொருட்களை அறிமுகம் செய்தது. புதிய மொடல் ஐஃபோன்களால் 5ஜி நெட்வொர்க் சேவயைப் பயன்படுத்த முடியும். (5ஜி சேவை இருக்கும் இடங்களில் மட்டும்)

மேலும் இந்த புதிய ஃபோன்களில் ஓஎல்ஈடி திரைகள் உள்ளன. இதில் ஐஃபோன் 12ன் விலை 799 அமெரிக்க டொலர்கள் என்றும், ஐஃபோன் 12 மக்ஸின் விலை 699 அமெரிக்க டொலர்கள் என்றும், ப்ரோ மற்றும் ப்ரோ மக்ஸ் மொடல்கள் 1100லிருந்து 1200 டொலர்கள் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கடந்த சில காலமாகவே தயாரிப்பில் இருந்து வரும் மினி என்கிற ஹோம்பாட் ஸ்பீக்கரும், புதிய ஹெட்ஃபோன் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் போஸ், ஸோனோஸ், லாஜிடெக் ஆகிய நிறுவனங்களின் ஒலி சார்ந்த தயாரிப்புகளின் விற்பனையை அப்பிள் நிறுவனம் நிறுத்தியது. இதனால் அப்பிளின் ஒலி சார்ந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இது சரியான நேரம் என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வேகமான ப்ராசஸருடன் கூடிய அப்பிள் டிவி, புதிய விளையாட்டுகள் கொண்ட அப்பிள் ஆர்கேட் ஆகியவை பற்றிய தகவல்களும் வெளியாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here