அரிசி இறக்குமதியை இடைநிறுத்துங்கள்!

பாகிஸ்தானில் இருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்யும் முடிவை இடைநிறுத்துமாறு அனைத்து இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு அரசிடம் கோரியுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் நமல் கருணாரத்ன, பல வகையான அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது, ஆரம்ப கட்டமாக பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.

உள்ளூர் தொழில்துறையை வளப்படுத்த அரிசி இறக்குமதி செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.

தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சில பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது. பின்னர், தனது அறிக்கைகளுக்கு முரணாக அரசியை இறக்குமதி செய்கிறது என சுட்டிக்காட்டியது.

உள்ளூர் உற்பத்தியை வளப்படுத்தப் போவதாக கூறி மஞ்சள் போன்ற பொருட்களின் இறக்குமதியை அரசு தடைசெய்துள்ளது. இதனால் மஞ்சள் உள்ளிட்ட பல பொருட்கள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. இந்த நிலையில் அரசு தனது கொள்கைக்கு மாறாக அரிசியை இறக்குமதி செய்கிறது என குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here