நிரம்புகிறது கொரோனா வைத்தியசாலைகள்: 251 படுக்கைகளே உள்ளன!

மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்றையடுத்து நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததையடுத்து, கொரோனா வைத்தியசாலைகள் அதன் உச்சக்கட்ட எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைத்தியசாலைகளில் இன்னும் 251 படுக்கைகளே வெற்றிடமாக உள்ளதாக COVID-19  தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) நேற்றைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, 13 ​​மருத்துவமனையில் 1,440 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைத்தியசாலைகளில் 1,691 நோயாளர்கள் சிகிச்சை பெற வசதியுண்டு. அதன்படி, தற்போது 251 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐ.டி.எச்), வெலிகந்த ஆதார மருத்துவமனை, கம்புருகமுவ மருத்துவமனை, தெல்தெனிய மருத்துவமனை மற்றும் காத்தான்குடி மருத்துவமனை ஆகியவை அதன் படுக்கை எண்ணிக்கையை விட அதிகமான நோயாளிகளை தற்போது கொண்டுள்ளன.

தாங்கு திறனை விட, ஐ.டி.எச் வைத்தியசாலையில் 43 நோயாளிகள், வெலிக்கந்த வைத்தியசாலையில் 10 நோயாளிகள், கம்புருகமுவ வைத்தியசாலையில் 13 நோயாளிகள், தெல்தெனிய வைத்தியசாலையில் ஒருவர், மற்றும் காத்தான்குடி வைத்தியசாலையில் 6 நோயாளிகளை தற்போது கொண்டுள்ளன.

இதேவேளை, தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், நிலைமையைப் பொறுத்து புதிய COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இதற்காக 147 மருத்துவமனைகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்த மருத்துவமனைகளில் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இடமளிக்க முடியும்.

தற்போது கொரோனா தொற்றாளர்களிற்கு ஐடிஎச், வெலிக்கந்த ஆதார மருத்துவமனை, இரணவில மருத்துவமனை, மினுவாங்கொட ஆதார மருத்துவமனை, கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை, ஹம்பாந்தோட்ட மாவட்ட பொது மருத்துவமனை, ரம்புக்கன மாவட்ட மருத்துவமனை, கம்புருகமுவ மருத்துவமனை, காத்தான்குடி மருத்துவமனை, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை, தெல்தெனிய அடிப்படை மருத்துவமனை, ஹோமகமா அடிப்படை மருத்துவமனை  மற்றும் பல்லேகமவின் லகல பிரதேச மருத்துவமனை ஆகிய 13 மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here