சீனி, ரின் மீன், வெங்காயத்தின் புதிய விலைகள்: இறக்குமதி வரி நீக்கம்!

கொரோனா பரவல் மற்றும் தற்போதைய வாழ்க்கை செலவை கருத்தில் கொண்டு சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரியை நீக்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி அந்த உணவுப் பொருட்களின் புதிய விலை பட்டியலையும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

பருப்பு, ரின்மீன், பெரிய வெங்காயம், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு முதல் ரின் மீன் (பெரியது)- 200 ரூபா, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100, சீனி ஒரு கிலோ 85 ரூபாவிற்கே விற்பனை செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சதொச விற்பனை நிலையத்தில் கிலோ 500 ரூபாவிற்கு கொள்வனவு செய்த பருப்பை 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்யலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here