திருகோணமலையில் குதிரையோடியவர் கைது!

திருகோணமலையில் ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத சென்ற ஒருவரை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் இன்று(13) கைது செய்துள்ளனர்.

வெருகல் மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நாளை (14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here