சுதந்திரமான ஊடகப் பணிக்கு சவால் விடும் தாக்குதல் இது: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

சுதந்திரமான ஊடகப் பணிக்கு சவால் விடும் தாக்குதல் இது – முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை வன்மையான கண்டனத்திற்குரியது. இத் தாக்குதலானது சுதந்திரமான ஊடகப் பணிக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,
சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார்
தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் காடுகள் சட்டவிரோதிகளால்
அழிக்கப்பட்டு வருகிறது. இந்த அழிவிலிருந்து காடுகளை காப்பாற்றும்
பணியில் ஊடகவியலாளர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. அதுவும்
முல்லைத்தீவில் இடம்பெற்று வருகின்ற காடழிப்பு தொடர்பில் அங்கு
பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் சூழலியல் கரிசனையோடு
செய்தியறிக்கையிட்டு வருகின்றனர். இதன் மூலமே இவ்வாறான சட்டவிரோத
செயற்பாடுகள் வெளியுலகிற்கு வருகிறது. எனவேதான் சட்டவிரோத செயற்பாடுகளில ஈடுபடுகின்றவர்களுக்கு ஊடகவியலாளர்கள் பெரும் தடையாக இருப்பதனால்தான் அவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக அமைகிறது.

ஊடகவியலாளர்கள் மீதான இத்தாக்குதல் என்பது தாக்குதலுக்குள்ளான
ஊடகவியலாளர்களுக்கு மட்டுமன்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கமான ஒரு
அச்சுறுத்தலே. எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை
சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் மேற்கொள்ள முடியா சூழலை
ஏற்படுத்தும் எனவே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள்
சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு,
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here