ரிஷாத் தம்பி ஜனாதிபதிக்கு கடிதம்: விடுதலைக்கு சட்டமா அதிபர் அதிருப்தி!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணைகளை குற்றவியல் விசாரணைப்பிரிவு நிறுத்துவது நியாயமற்றது என சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

சிஐடி அதிகாரிகளுடன் நேற்று நடந்த கூட்டத்தில், ரியஜ் பதியுதீனை விடுவிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானம் நியாயமற்ற காரணங்களினால் எடுக்கப்பட்டுள்ளதை சட்டமா அதிபர் அவதானித்ததாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசாரா ஜெயவர்த்தன தெரிவித்தார்.

இதற்கிடையில், ரியாஜ் பதியுதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தன்னை மீண்டும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துவது அரசியல் காரணிகளின் நிமித்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here