ஓட்டமாவடியில் செப்டம்பரில் மாத்திரம் 12 பேருக்கு டெங்கு

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் 10ம் திகதி வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரசே செயலாளர் பிரிவில் 02ம் வட்டாரத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதனால் அப்பகுதியில் உள்ள வடிகான்கள் துப்பரவு செய்து அதற்கு மருந்து தெளிக்கும் நடவடிக்கையும் பிரதேசத்தில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி அதற்கு மருந்து தெளிப்பதுடன் பொது மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும் நேற்று இடம் பெற்றது.

இதன் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் 10ம் திகதி வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் மாதம் 10ம் திகதி வரை 12 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம் பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள் பிரதேச சபை ஊழியர்கள, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here