கொரோனாவின் உடனடி முடிவு சாத்தியமில்லாததால், கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!

கொரோனா தொற்று உலகளாவிய தொற்று நோயாக உள்ளதால், அதன் இறுதி முடிவு உடனடியாாக சாத்தியமில்லை. எனவே மக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என தலைமை தொற்றுநோயியல் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நாட்டை முழுமையான லொக் டவுன் செய்து, சமூகத்தை நீண்ட காலத்திற்கு முடக்க முடியாது. இயல்பான வாழ்க்கை நகரும்போது வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அதேவேளை, உயர்தர பரீட்சை சமயத்தில் பெற்றோர், மாணவர், ஆசிரியர் ஆகியோருக்கு, தற்போதைய நிலைமையை கையாளும் பெரிய பொறுப்புள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியமான பரீட்சையாக உயர்தர பரீட்சையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் தோற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here