மன்னாரில் 922 மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்: பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டதில் இது வரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மன்னார் பட்டித்தோட்டத்தை சேர்ந்த 130 குடும்பங்களை சேர்ந்த 443 நபர்களும், பெரியகடை பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 479 நபர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து இன்று (12) மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தவிர்ந்த குறித்த கிராமங்களை சேர்ந்த ஏனையவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் மூன்றாவது நிலை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த முடிவுகளின் படி மேலும் மூவறுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாங்கள் 24 மணி நேர முடக்க நிலையை இரண்டு கிராமங்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம்.

இன்றைய தினம் திங்கட்கிழமை முழுமையாக அப்பிரதேசங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (12) மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடன் கலந்துரையாடிய போது இன்று திங்கட்கிழமை மாலையுடன் முடக்க நிலையில் இருந்து விடுவிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே இன்றைய தினம் பரிசோதனைகள் சுமூகமான முறையில் நிறைவடையுமாக இருந்தால் இன்று மாலை 6 மணியில் இருந்து மீண்டும் மக்களின் இயல்பான நிலைக்கு அக்கிராமங்களை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இது வரை எமது பகுதியில் சமூக தொற்று இனங்காணப்படாது இருந்தால் கூட மக்கள் விழிர்ப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

விழிர்ப்புணர்வு இல்லாத நிலையில் நாங்கள் இந்த அபாய நிலையை மேலும் எதிர் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.

மேலும் அரச அலுவலகங்கள் அனைத்தும் இயல்பான நிலையில் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் . எனவே பொய்யான தகவல்களை நம்பி அலுவலகத்துக்கு சமூகம் அழிப்பதை தவிர்க்க வேண்டாம். உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றி அனைத்து அரச ஊழியர்களும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.

அத்துடன் உயர் தர பரீட்சைகளை பொறுத்த வரையில் பரீட்சைகளுக்கான சகல நடவடிக்கைகளும் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் மூன்றாம் நிலை தொற்றுக்குள்ளாகிய மாணவர்கள் விசேட அறைகளில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே மன்னார் மாவட்டத்தை பொருத்த வரையில் பரீட்சைகள் மிகவும் சுமூகமான முறையில் இடம் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here