தனியார் வைத்தியசாலை மூடல்: யாரும் சிகிச்சை பெற்றிருந்தால் தகவல் தர கோரிக்கை!

நீர்கொழும்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையொன்று மூடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் சுகவீனடைந்து ஒக்ரோகர் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை ஆவே மரியா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அந்த வைத்தியசாலை மூடப்பட்டதுடன், அந்த வைத்தியசாலையில் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை யாராவது சிகிச்சை பெற்றிருந்தால் அரசிடம் தகவல் வழங்கும்படி அறிவித்தல் விடுமாறு நீர்கொழும்பு நகரசபை சுகாதார அதிகாரி கோவிட் -19 செயல்பாட்டு மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here