முள்ளியவளை வாராந்த சந்தையினை இடம் மாற்றும் நடவடிக்கை: வியாபாரிகள் எதிர்ப்பு!

முள்ளியவளை நீராவிப்பிட்டியில் நீண்டகாலமாக இயங்கிவரும் வாராந்த சந்தையினை கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஒருசில உறுப்பினர்கள் இடம் மாற்ற எடுத்த நடவடிக்கை பொலீசாரின் தலையீட்டினை தொடர்ந்து வியாபாரிகள் அதே இடத்தில் வியாபார நடவடிக்கையினை தொடர்ந்துள்ளார்கள்.

நீராவிப்பிட்டியில் அமைந்துள்ள சந்தை நேற்று (11) தொடக்கம் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் என பிரதேச சபையின் முள்ளியவளை உப அலுவலகத்தால் அறிவித்தல் ஒட்டப்பட்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும் வியாபாரிகள் மக்கள் நன்மை கருதி அதே இடத்தில் நேற்று வியாபார நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இன்னிலையில் நேற்று காலை சந்தை கூடியபோது பொலீசார் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் வியாபாரிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதேச சபையின் 18 உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் கையெழுத்து வைத்து அதே இடத்தில் வாராந்தை சந்தை இயங்க தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

முள்ளியவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதேச சபை நீதிமன்றத்திற்கு சென்று இந்த இடத்தில் சந்தை இயங்க கூடாது என்று நீதிமன்ற கட்டளையினை பெற்றால் அதனை பொலீஸ் நடைமுறைப்படுத்தும், அதேவேளை வணிகர்கள் அதே இடத்தில்தான் வாராந்த சந்தை இருக்கவேண்டும் நீதிமன்றம் சென்று அதற்கான உத்தரவினை பெற்றால் அதனை நடைமுறைப்படுத்த முடியம் என்று தெரிவித்துள்ளார். அதுவரையும் வியாபார நடவடிக்கை தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

சந்தை குறித்து வியாபாரிகள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்
நீராவிப்பிட்டி பகுதியில் இரு மதங்களை சேர்ந்தவர்கள் ஜக்கியத்துடன் வணிக நடவடிக்கையினை முன்னெடுத்து வந்துள்ளார்கள். ஒரு சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்கள் அரசியலுக்காக மதங்களுக்கிடையில் பிரச்சனையினை தூண்ட முனைக்கின்றார்கள்.

பிரதேச செயலகத்தினால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நீராவிப்பிட்டி வாராந்த சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதேச சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டு அதில் வியாபாரிகளுக்கு வரி என்பன தொடர்ச்சியக அறவிடப்பட்டு வந்துள்ள மக்களின் நன்மைகருத்தி இடம்பெற்று வரும் வாராந்த சந்தையினை இடம்மாற்றுவது என்பது கவலையளிக்கின்றது.

வியாபரிகளிடம் எந்த ஆலோசனையும், அறிவித்தல்களும் இல்லாமல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணீரூற்று, முள்ளியவளை பகுதிகளில் இரண்டு சந்தைகள் காணப்பட்ட போது இரண்டு சந்தைகளை தாண்டியே வாராந்த சந்தைக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் இலகுவான இடமாக நீராவிப்பிட்டி வாராந்த சந்தை பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சந்தை குறித்து கரைதுறைப்பற்ற பிரதேச சபையின் உறுப்பினர் சி.லோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மையப்பகுதியில் குறித்த வாராந்த சந்தை அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உள்ளது.

இனங்களுக்கிடையில் குந்தகம் விளைவிற்கும் வகையில் இதனை ஒரு அரசியல் பிரச்சனையாக்கி இனமுரண்பாட்டினை உருவாக்கி இந்த பிரதேசத்தில் இருக்கும் ஜக்கியத்தன்மையினையும் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையினையும் சீர்குலைத்து மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் வாராந்த சந்தையினை இடம்மாற்றுவது வாடிக்கையாளர்களையும் வியாபாரிகளையும் பாதிக்கும் விடயம்.
ஒருசிலர் எதிர்கால அரசியலை கருதி இனவாதத்தினை கையில் எடுத்துள்ளார்கள். இனவாதத்தினை மூலதனமாக வைத்து அரசியல் செய்வது என்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் சி.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here