இன்று ஆரம்பிக்கிறது உயர்தர பரீட்சை!

2020 க.பொ.த உயர்தர பரீட்சை இன்று (12) இன்று காலை 2,648 பரீட்சை மையங்களில் ஆரம்பிக்கிறது.

இன்று முதல் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெறும் பரீட்சையில்,   362,824 மாணவர்கள் தோற்றுகிறார்கள்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 319,485 மாணவர்கள் தோற்றுகிறார்கள். பழைய பாடத்திட்டத்தின் கீழ் 43,339 மாணவர்கள் தோற்றுகிறார்கள்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ், 277,580 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 41,905 தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவார்கள்.

தற்போது ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஊரடங்கு அனுமதி அட்டையாக,மாணவர்களின் அனுமதி அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here