யாழ், கிளிநொச்சியிலிருந்து கஞ்சா கடத்திய சிப்பாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு கேரள கஞ்சா கடத்திய இராணுவச்சிப்பாய் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்னேரியா, ஹிங்குரன்கொட, அரலங்வில பகுதிகளிற்கு அவர்கள் கேரள கஞ்சாவை கடத்தியுள்ளனர்.

மின்னேரியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று முன்தினம் சனிக்கிழமை மின்னேரியா பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 590 கிராம் கஞ்சா, கஞ்சா விற்ற 61,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டது. அவர்களின் வங்கிக்கணக்குகளில் 402,000 ரூபா பணமும் மீட்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here