3 வைத்தியர்களிற்கும் கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 வைத்தியர்களும் உள்ளடங்குகின்றனர்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்றில் 1100 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 வைத்தியர்களும் உள்ளடங்குகின்றனர்.

மாவனெல்ல பகுதியை சேர்ந்த இருவர், கேகாலை நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் என 3 வைத்தியர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, கம்பஹவின் எலவபிட்டிய பகுதியை சேர்ந்த 4 பௌத்த பிக்குகளும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here