மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 39 பேர் ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்போது தங்கியுள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த மேலம் 22 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இப்போது 1100 ஐ கடந்துள்ளது.