முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் 24 பேருக்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் 59 வது படைப்பிரிவின் இராணுவ பயிற்சி முகாமில் கடந்த எட்டாம் திகதி கம்பஹா பகுதியில் பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடைய உறவினர்கள் சுமார் 220 பேர் அளவில் கொண்டு வந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக விடப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான பி சிஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றையதினம் (10) ஒரு தொகுதியினருக்கான பி சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் நேற்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் வெலிகந்த மற்றும் அங்கொடை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தொற்றுக்குள்ளான 20 பெயரில் 7 ஆண்களும் 7 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர்களை தொற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here