அதிகரித்த தொற்று… 12,000 மக்கள் வாழும் பகுதி லொக் டவுன்!

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல மற்றும் மிரிகாம பிரதேச செயலகங்களிற்குட்பட்ட மாலிகதென்ன, குரேகொடுவ மற்றும் எலுவபிட்டிய பகுதிகள் லொக் டவுன் செய்யப்பட்டுள்ளன.

மூன்று கிராமங்கள் இன்று முதல் மூடப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில் இருந்து இதுவரை 37 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கிராமங்களுக்குள் யாரும் நுழையவோ, பிரதேசவாசிகள் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மூன்று பகுதிகளிலும் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பிரதேசவாசிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுனில் ஜெயலத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here