ரிஷாத் சகோதரரின் விடுதலை: அனைத்து ஆவணங்களுடனும் சிஐடி அதிகாரிகளை அழைத்த சட்டமா அதிபர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை விடுவித்தது தொடர்பாக  சிஐடியின் பிரதி பொலிஸ்மா அதிபரையும், தலைமை விசாரணை அதிகாரியை நாளை சட்டமா அதிபர் தப்ப்புல டி லிவேரா வரவழைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வழக்கின் அனைத்து விசாரணைப் ஆவணங்களையும் நாளை கொண்டு வருமாறு சட்டமா அதிபர், இரண்டு பொலிஸ் அதிகாரிகளிற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன தெரிவித்தள்ளார்.

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பில், ஏப்ரல் 14 அன்று புட்த்தளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ரியாஜ் கைது செய்யப்பட்டார். செப்ரெம்பர் 30ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடவில்லை என்பது தெரியவந்ததாக பொலிசார் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here