மனித வள அபிவிருத்தி நிதியத்துடன் கலந்துரையாடல்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிக்கும் இடையிலான சந்திப்பொன்று கொட்டகலை C.L.F வளாக கேட்போர் கூடத்தில் நேற்று (10) இடம்பெற்றது.

இதன்போது,பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இதில் முக்கியமாக தோட்ட தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் மலைகளை அண்மித்து அவர்களுக்காக பகல் உணவு உட்கொள்ளும் இடம் மற்றும் மலசலகூட வசதிகள் கொண்ட ஓய்வு அறை அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், மலையகத்தில் குளவிக்கொட்டு ஆபத்தானது அதிகரித்து வருவதால் அதிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு முன்மாதிரியாக ஒரு முககவசமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் உயர் அதிகாரி, மற்றும் பிராந்திய காரியாலயங்களின் பணிப்பாளர்கள், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி தலைவர் பரத் அருள்சாமி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான மதியுகராஜா, கணபதி கனகராஜ், பிலிப் குமார், சக்திவேல் மற்றும் அனைத்து பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here