அனலைதீவு, காரைநகர் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன!

யாழ்ப்பாணம்அனலைதீவு மற்றும் காரைநகரின் ஒரு பகுதியில் விதிக்கப்பட்டிருந்த லொக் டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (11) காலை முதல் அங்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தி வந்த இருவர் மற்றும் அவர்களிற்கு ஒத்தாசையாக இருந்த ஒருவர் மூலம் கொரோனா பரவல் அபாயம் எழுந்ததையடுத்து, அனலைதீவு மற்றும் காரைநகரில் ஒரு பகுதி லொக் டவுன் செய்யப்பட்டிருந்தது.

கடத்தல்காரர்கள் மூவரும் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், தொற்று ஏற்பவில்லையென்பது தெரிய வந்துள்ளது. எனினும், அவர்களிற்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவர்களிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானதால், அனலைதீவு மற்றும் காரைநகரின் ஒரு பகுதியில் விதிக்கப்பட்ட லொக் டவுன் விலக்கப்பட்டது.

அதேவேளை,அங்கு தனிமைப்படுத்தப்பட்ட 8 குடும்பங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here