கர்ப்பிணி மனைவியை கழுத்து நெரித்து கொன்றுவிட்டு பொலிசில் சரணடைந்த கணவன்: ஆனால் மனைவி சாகவில்லை!

கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், கர்ப்பிணிப் பெண் உயிருடனிருப்பதை அவதானித்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தற்போது, தாயும், சேயும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (9) இந்த சம்பவம் நடந்தது.

34 வயதான ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து, தனது மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். துணியொன்றினால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

உடனடியாக அந்த வீட்டிற்கு பொலிசார் சென்று சோதனையிட்டபோது, கர்ப்பிணி மனைவியின் வாய்க்குள் துணி அடைந்து, கழுத்தை துணியொன்றினால் இறுக்கியிருந்ததை கவனித்தனர். அவர் மயக்கத்திலிருந்தார். பெண் உயிருடனிருப்பதை அவதானித்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கழுத்த நெரித்ததில் அவர் உயிரிழந்து விட்டார் என நினைத்து கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் பெண்ணினதும், குழந்தையினதும் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here