இன்று புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கிறது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11) ஆரம்பிக்கிறது.

நாடு முழுவதும் 331,694 மாணவர்கள் 2,936 மையங்களில் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள்.

காலை 9:30 மணிக்கு பரீட்சை ஆரம்பிக்கிறது.

பரீட்சையின் முதலாம் பகுதிக்கு காலை 9:30 மணி 10.30 மணி வரையும், இரண்டாவது பகுதி காலை 11 மணி முதல் 12:15 மணி வரையும் இடம்பெறும்.

மாணவர்கள் தங்கள் சீருடையின் இடது பக்கத்தில் தங்கள் பரீட்சை எண்ணை இணைக்க வேண்டும். காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்திற்குள் அமர வேண்டும்.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக காலை 8.45 மணிக்கே பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.

பரீட்சை இடைவேளையின் போதும், பரீட்சை மையத்திற்குள் பெற்றோர் நுழைவதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவரின் அனுமதி அட்டையின் பிரதியை வைத்திருக்க வேண்டும். இந்த பிரதியை பெற்றோர்கள் வைத்திருப்பதன் மூலம், பொலிஸ் வீதித் தடைகளை எளிதில் கடக்க முடியும்.

அனுமதி அட்டையின் புகைப்படம் அல்லது ஸ்கான் செய்யப்பட்ட பிரதி போதுமானதாக இருக்கும்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விழிப்புடன் இருக்கவும், அதற்கேற்ப சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பரீட்சை மையங்களுக்கு வெளியே குழுக்களாகச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here