சிலாபம் மாணவனிற்கு கொரோனா இல்லை!

சிலாபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டப்பட 17 வயது மாணவனிற்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியானது. இதையடுத்து அவர் நேற்றிரவு வீடு திரும்பினார்.

அவருக்கு நடத்தப்பட்ட 2வது, 3வது பிசிஆர் சோதனைகளில் தொற்று இல்லையென உறுதியானதையடுத்து வீடு திரும்பினார்.

17வயதான மாணவன் சுகவீனமடைந்ததும், பங்கதெனியாவிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கடந்த 6ஆம் திகதி சென்றார். வைத்தியரின் ஆலோசனை படி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் தொற்றிற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2ஆம், 3ஆம் சோதனைகளில் எதிர்மறையான முடிவு வெளியானது.

இதேவேளை, மாணவனுடன் தொடர்புபட்ட பங்கதெனிய தனியார் வைத்தியசாலையை சேர்ந்தவருக்கு நடத்தப்பட்ட சோதனையிலும், அவரும் பாதிக்கப்படவில்லையென்பது தெரிய வந்தது.

மாணவனுடன் கல்வி வகுப்புக்களில் கலந்து கொண்ட 17 மாணவர்கள் உள்ளிட்ட 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here