நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்!

நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,628 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 105 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 103 பேர் மினுவாங்கொட தொற்றினால் பாதிக்கப்பட்டர்கள்.

இதன்மூலம் மினுவாங்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,186 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் இரண்டு நபர்கள், தொழிற்சாலை தொழிலாளர்களின் நெருக்கமான பழகிய 101 நபர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய இரண்டு கப்பற் பணியாளர்கள் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றிலிருந்து 3,306 பேர் குணமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் 12 மருத்துவமனைகளில் 1,309 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 341 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here