நாளை புலமைப்பரிசில் பரீட்சை: அனுமதி அட்டை பிரதியை வைத்திருக்குமாறு பெற்றோருக்கு அறிவித்தல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (11) இடம்பெறவுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்களின் அனுமதி அட்டையின் பிரதியை தம்முடன் வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தம்முடன் வைத்திருக்கும் அனுமதி அட்டை நகலை காண்பிப்பதன் மூலம், பொலிஸ் சோதனை சாவடிகளை பெற்றோர் இலகுவாக கடக்கலாமென தெரிவித்தார்.

அனுமதி அட்டையின் புகைப்படம் அல்லது  ஸ்கான் செய்யப்பட்ட பிரதியை தம்முடன் வைத்திருந்தாலே போதுமானது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கேற்ப சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பரீட்சை மையங்களுக்கு வெளியே குழுக்களாகச் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதியில் பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தால், மாணவர்கள் பரீட்சை மையத்தை உறுதிப்படுத்துமாறும் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், மாணவர்களை பரீட்சைக்கு பெற்றோர் ஒருவரோ அல்லது இருவரோ அழைத்து வரலாம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here