கட்டாரில் திடீரென உயிரிழந்த யாழ் வாசி!

கட்டாரில் தொழில்புரிந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று (09) வெள்ளிக்கிழமை திடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர், நேற்றைய தினம் திடிரென சுகயீனமுற்ற நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலியை சொந்த இடமாக கொண்டவரும், கரவெட்டி கன்பொல்லைப் பகுதியில் திருமணம் செய்துள்ள ஒரு பிள்ளையின் தந்தையான கனகலிங்கம் கலைச்செல்வன் (38 ) என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

அவரது சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கு குடும்பத்தினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here