அனலைதீவு தொடர்ந்து லொக் டவுன்: கடத்தல்காரர்கள் தனிமைச்சிறையில்!

அனலைதீவு பிரதேசத்தில் நேற்றைய தினம் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவானிடம் முற்படுத்தப்பட்டு நீதவானின் அனுமதியுடன் குறித்த மூவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தயாவிலிருந்து மஞ்சள் கடத்தி வந்த இருவர், படகை கரைக்கு கொண்டு வர உதவிய கடத்தல்காரர்களில் ஒருவரின் சகோதரர் ஆகியோரே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை யடுத்து அனலைதீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் நடமாடியதாக கருதப்படும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு அனலைதீவு பிரதேசம் நேற்று காலையிலிருந்து அப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேறாதவாறும் பிரதேசத்துக்குள் புதிதாக யாரும் உட்பிரவேசிக்காதவாறும் முடக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் அந்த முடக்கம் நடைமுறையில் உள்ளதாக ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிற்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. PCR பரிசோதனை முடிவுகள் வரும் வரை குறித்த முடக்கம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப் படுத்தப் பட்டுள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 நபர்களுக்குமான உலர் உணவுப் பொருட்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு அனலைதீவு பகுதி ஊர்காவற்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் , சுகாதார பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது

மேலும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் அவசர கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்தி வருபவர்களின் தகவல் இருப்பின் பொதுமக்கள் 0212 222 6666 எனும் இலக்கத்திற்கு அறியத் தருமாறு குறிப்பிட்டுள்ளதோடு.

மஞ்சள் கடத்தி வந்ததுடன் சம்பந்தப் பட்டவர்கள் அனலைதீவில் 3 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனலைதீவின் பல பகுதிகளில் நடமாடியதாலும் இவ்வாறான வேறு சிலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாலும் அனலைதீவிலிருந்து வெளியே வருவதும் உள்ளே செல்வதும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக எம்மால் தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபர்களில் ஒருவர் தப்பி சென்று காரைநகரில் தங்கியிருந்த வீடும் அந்த வீட்டினை சார்ந்தாரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். எமது பிரதேசத்தில் குறிப்பாக தீவகத்தில் கடல் மார்க்கமாக ஏற்படும் தொடர்புகளால் ஏற்படக் கூடிய கொரோணா நோய் பரம்பலைக் கட்டுபடுத்த அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here