ரிசாத் பதியுதீனின் தம்பி விவகாரம்: கையெழுத்திட்ட 2 தமிழ் எம்.பிக்கள்!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதினின் சகோதரர் மீள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஆளும் தரப்பின் 100 எம்.பிக்கள் கையெழுத்திட்ட ஆவணம் ஜனாதிபதி மற்றும் பிதமரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் 2 தமிழ் எம்.பிக்களும் உள்ளடங்குகின்றனர்.

அரசை தட்டிக் கேட்க வேண்டிய இடங்களிலும் மௌனமாக உட்கார்ந்திருக்கும் அங்கஜன் இராமநாதன், ச.வியாழேந்திரன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் வந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தியாகி திலீபன் தொடர்பில் எகத்தாளமாக கருத்து தெரிவித்தபோது, அவரக்கு வலதும் இடதுமாக அங்கஜன் இராமநாதன், ச.வியாழேந்திரன் மௌனமாக உட்கார்ந்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

எனினும், தேசியப்பட்டியல் எம்.பி, சுரேன் ராகவன் இதில் கையெழுத்திடவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here