கொரோனா தொற்று எண்ணிக்கை 4,523 ஆக உயர்வு!

இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,523 ஆக உயர்ந்துள்ளது, நேற்று 35 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 27 பேர், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேர், இந்திய கடலோடிகள் 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய இருவர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட கொரோனா தொற்று எண்ணிக்கை 1083 ஆக அதிகரிக்கிறது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,296 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,214 தொற்றாளர்கள் தற்போது 12 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 350 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here