திருகோணமலை கொரோனா தகவல் போலி!

திருகோணமலை நிலாவெளி பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான தகவல் போலியானது என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

72 வயதான ஒருவர் நெஞ்சு, சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

இதையடுத்து, கொரோனா நோயாளி இனம்காணப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.

இது போலியானது, நிலாவெளி வைத்தியசாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினேன் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here