பொகவந்தலாவ பகுதியில் டிமிக்கி விட்ட ஆடைத்தொழிற்சாலை பெண் அடையாளம் காணப்பட்டார்!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் பெண்ணொருவர் சுகாதார அதிகாரிகளின் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், இாணுவத்தினர் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் பெண் அடையாளம் காணப்பட்டார்.

நேற்று (8) காலை தனது சொந்த ஊரான ஹட்டன் டிக்கோயா புளியாவத்தை, ஹன்சி தோட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார்.

அவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குடும்பத்துடன் ரந்தம்பேயிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவர் பற்றிய விபரங்களை ஆடைத் தொழிற்சாலை, இராணுவத்தலைமையகம் என்பன நோர்வூட் பொலிசாரிற்கு வழங்கியதன் பின்னர், அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலை பணிப்பெண், அவரது கணவர், பணிப்பெண்ணின் தாய் மற்றும் தந்தை மற்றும் பணிப்பெண்ணின் 10 வயது மகள் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பணிப்பெண்ணின் வீட்டை ஒட்டியுள்ள 13 வீடுகளில் 69 உறுப்பினர்களை தனிமைப்படுத்த பொது சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here