மன்னார் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பின!

மன்னாரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவைகள் மீண்டும் வழமைக்க திரும்பியுள்ளதோடு, அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னாரில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பாக வடமாகாண ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துiராடலில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய காலநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாயர் வைத்திய கலாநிதி டி.வினோதன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் கொரோனா தொற்று நோயாளருடன் தொடர்பை கொண்டவர்கள் என்பதன் அடிப்படையிலே 42 பேரூம் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதன் அடிப்படையில் 51 பேரூம் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கான பீ.சி.ஆர்.பரிசோதனைகள் இடம் பெற்று வருகின்றது.

2 ஆம் நிலையை பொறுத்த வகையில் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த போக்கு வரத்து சேவைகள் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை(9) மாலை 4 மணிமுதல் வழமைக்கு திரும்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாகவும் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாகவும் போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரச தனியார் போக்குவரத்து சேவையின் பூரண ஒத்துழைப்பை நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

கடல் மூலமாக கடத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் அவற்றில் இருந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பாக கடற்படையினருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டள்ளது.

இனிவரும் காலங்களில் இறுக்கமான நடைறைகளுக்கு அமைவாக கடல் வழியான கடத்தல் செயற்பாடுகள் நிறுத்தப்படும்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அச்ச நிலையில் நாம் உள்ளோம்.

இந்த நிலையில் கடல் மூலமான கடத்தல் நடவடிக்கைகள் எமது மாவட்டத்தையும் ஆபத்தான நிலைக்குள் தள்ளி விடும். இதனால் குறித்த விடையத்தில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

எனவே எமது இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். பொதுப் பரிட்சைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் எவ்வித இடையூறுகளும் இன்றி இடம் பெறும். அதற்கான சகல ஏற்பாடுகளையும் கல்வித்திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

சுகாதார ஆலோசனைகளை சுகாதார திணைக்களம் வழங்கியுள்ளது. மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் மன்னாரில் தொற்று நீக்கிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. மக்களுக்கு அச்சமற்ற பாதுகாப்பான ஒரு நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here