டிக்கோயா வைத்தியசாலையில் அலைமோதும் நோயாளர்கள்!

நாட்டில் கொரோனா தொற்று அபாயமுள்ள நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் மக்கள் கூட்டமாக வரிசையில் நின்ற விவகாரம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நேற்று (8) பல்வேறு சிகிச்சைகளிற்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கிளினிக்கிற்கு வந்த நோயாளிகளை வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் பரிசோதித்த போதிலும், வரிசையில் காத்திருந்த மக்களிற்கிடையிலான சமூக இடைவெளியை நிர்வாகம் பராமரிக்கவில்லை என கிளினிக்கிற்கு வந்தவர்கள் சிலர் தெரிவித்தனர்.

மருத்துவ தேவைகளிற்காக ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா மற்றும் சாமிமலை ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் தமது மருத்துவ தேவைகளிற்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு காலையிலேயே வந்த நீண்ட வரிசையில் வந்து காத்திருக்க வேண்டியிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா அபாயமுள்ள நிலையில், வைத்தியசாலைக்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென நோயாளர்கள் வலியுறுத்தகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here