சேகுவெரா நாட்டிய மரத்தின் கீழ் அவரது நினைவு!

கியூப புரட்சிப் போராளி எர்னஸ்ட் சே குவேராவின் 53 வது நினைவுதினம் நேற்று (8) இலங்கையிலும் அனுட்டிக்கப்பட்டது.

மொரகஹேன, யஹலகல தோட்டத்தில் நடந்த இந்த நிகழ்வில் இலங்கைக்கான கியூப தூதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோசலிச இளைஞர் முன்னணி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

சுமார் 61 ஆண்டுகளுக்கு முன்பு சேகுவேரா கியூப அமைச்சராக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் அப்போது, யஹலகல தோட்டத்தில் mahogany மரமொன்றை நாட்டியிருந்தார்.

அந்த மரத்தடியிலேயே நினைவு நிகழ்வு நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here