நேற்று கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்!

மினுவாங்கொட கொரோனா பரவலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,053 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 29 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாட்டின் மொத்த கொரோன தொற்றாளர்கள் எண்ணிக்கை 4,488 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர், தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருக்கமாக பணியாற்றிய 18 நபர்கள்ளும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பத்து நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பிய ஏழு பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர் மற்றும் ஈரானில் இருந்து வந்த இரண்டு ஈரானிய பிரஜைகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,278 நபர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 289 நபர்கள் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here