ஊரடங்கு உத்தரவுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கும்!

கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள், கூட்டுறவு மற்றும் பொருளாதார மையங்கள் இன்று திறந்திருக்கும்.

வெலிசறை பொருளாதார மையமும் இன்றும் திறந்திருக்கும்.

இதற்கிடையில், தேங்காய், மீன், பால் மற்றும் பிற தேவைகள் போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக வீடுகளுக்கான நடமாடும் சேவைகளும் இயங்கி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகையில், கம்பாஹா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக மருந்தகங்கள், சதொச விற்பனை நிலையங்கள், சந்தைகள், கூட்டுறவு கடைகள், பல்பொருள் அங்காடிகள், உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மீன் சந்தைகள் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

இருப்பினும், மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகள் அல்லது சந்தைகளிற்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்துகிறார்.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரை மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here