வன்னிக்குள் சிலரை வெட்டிச்சரிக்க ஊடுருவல்: கிளிநொச்சி மாவட்ட ஆவா குழு ரௌடிகள் கைது!

முயற்சித்த ஆவா குழுவினர் நேற்று முன்தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று (08) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள் தடுப்பு காவலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைதானவர்களிடமிருந்து நான்கு வாள்களும் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் குடும்பஸ்தர்கள் சிலரை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் குறித்த நபர்கள் கைது செய்யப்படாதிருந்தால் திட்டமிட்டபடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும், குறித்த தாக்குதல் முயற்சி கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here